முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 ஒரு நாள்: இந்திய அணியில் மாற்றம் இல்லை

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, அக். 19 - இங்கிலாந்திற்கு எதிராக நடக்க இருக்கும் மீதமுள்ள 3 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இல்லை தெரிய வருகிறது. ஆனால் 20 ஓவர் போட்டியில் யூசுப் பதான் மற்றும் ராபின் உத்த ப்பா இருவரும் இடம் பெற இருக்கிறார்கள். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிவடைந்து விட்டன. இந்த 2 ஆட்டத்திலும் இந் திய அணி வெற்றி பெற்று முன்னிலை பெற்று உள்ளது. 

இங்கிலாந்திற்கு எதிரான முதல் ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 126 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஆட்ட ம் டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

எனவே எஞ்சிய 3 போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதல் 2 போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடியதால், தேர்வு குழுவினர் எந்த வித மாற்றமும் செய்யவி ல்லை. 

இங்கிலாந்திற்கு எதிரான முதல் 2 ஆட்டத்தில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவின் சுழற் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. எனவே ஹர்பஜன் சிங்கை மீண்டும் அணியில் சேர்க்கும் பேச்சு எழுப்பப்படவில்லை.  

20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் மட்டும் 2 மாற்றம் செய்யப் பட்டது. காம்பீர், பார்த்திவ் படேல் ஆகியோர் அணியில் இடம் பெற வில்லை. காம்பீருக்கு திருமணம் நடைபெறுவதால் 20 ஓவர் போட்டி யில் ஆடவில்லை. 

இவர்களுக்கு பதிலாக யூசுப் பதான் மற்றும் ராபின் உத்தப்பா ஆகி யோருக்கு 20 ஓவர் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 

எஞ்சியுள்ள போட்டிகள் வருகிற 20, 23 மற்றும் 25 -ம் தேதிகளில் நடக் கிறது. 20 ஓவர் போட்டி 29 -ம் தேதி நடக்கிறது. 

20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி : - தோனி (கேப்டன்), ரகானே, உத்தப்பா, விராட் கோக்லி, ரெய்னா, யூசுப் பதான், ரவீந்திர ஜடே ஜா, மனோஜ் திவாரி, அஸ்வின், வினய் குமார், பிரவீன் குமார், உமேஷ் யாதவ், வருண் ஆரோன் , அரவிந்த் மற்றும் ராகுல் சர்மா ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்