முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி எச்சரிக்கை

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

வஜ்ரிஸ்தான், அக்.20 - தங்கள் நாட்டின் மீது ஒருதலைப்பட்சமாக தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக அமெரிக்கா 10 முறை யோசித்துப் பார்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அஸ்பக் கயாமி கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அந்நாட்டு  ராணுவம் சரியாக பின்பற்றவில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. மேலும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு அந்நாட்டின் ஐ.எஸ்.ஐ. உளவுப்படை உதவி செய்தும் ஊக்கம் கொடுத்தும் வருகிறது என்றும் அமெரிக்கா கூறி வருகிறது.

இதனால் பாகிஸ்தான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதலை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அப்சஸ் கயாமி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள வடக்கு வஜ்ரிஸ்தானில் ஒருதலைப்பட்சமாக தாக்குதலை நடத்துவதற்கு முன்பாக அமெரிக்கா ஒரு முறைக்கு 10 முறை  யோசித்துப் பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதற்கு பதிலாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கயாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ தளபதியின் இந்த எச்சரிக்கையால் அமெரிக்கா - பாகிஸ்தான் உறவில் சற்று சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கு வஜ்ரிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக எப்போது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை பாகிஸ்தான்தான் உரிய நேரத்தில் தீர்மானிக்கும் என்றும் அமெரிக்கா தீர்மானிக்க முடியாது என்றும் கயாமி கூறியுள்ளார்.

இந்த வடக்கு வஜ்ரிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள்தான்  ஆப்கானிஸ்தானிற்குள் எல்லை தாண்டிச் சென்று அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

பாகிஸ்தான் ராணுவ குழுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பாகிஸ்தான் எம்.பி. ஒருவர் இந்த தகவலை கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago