முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய குண்டு வீச்சு விமானம் விழுந்து 2 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, அக்.21 - ரஷ்யாவின் குண்டு வீச்சு போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 2 விமானிகள் பலியானார்கள். ரஷ்யாவின் குண்டு வீச்சு போர் விமானம் எஸ்.யு. 24 நேற்று உக்ரைனில் உள்ள விமானப் படை தளத்தில் தரையிறங்கியபோது கீழே விழுந்து நொறுங்கியது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 2 விமானிகளும் உடல் கருகி பலியானார்கள்.

இந்த தகவலை ரஷ்ய விமான படையின் செய்தி தொடர்பாளர் விளாடிமிர் டிரிக் தெரிவித்தார்.

ரஷ்யாவின் மத்திய பகுதியில் உள்ள ரோவோனேஷ் நகரில் இருந்து பராமரிப்பு பணிகளுக்காக இந்த விமானம் உக்ரைன் நாட்டில்  ஓடு பாதையில் தரையிறங்கும் போது தரையில் மோதி தீப்பிடித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்த ரஷ்ய விமானப் படைத் தளபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தரையிறங்குவதற்கான கியர் பகுதியில் பழுது ஏற்பட்டதால் இந்த விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்