முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒரு நாள் - ஆஸ்திரேலியா அபார வெற்றி

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

செஞ்சுரியன், அக். 21 - தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக செஞ்சுரியனில் நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 93 ரன் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில், முன்னாள் கேப்ட ன் ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் மற்றும் மைக் ஹஸ்சி ஆகி யோர் சிறப்பாக பேட்டிங் செய்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

பின்பு பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களான ஜான்சன் மற்றும் கும்மின்ஸ் இருவரும் நன்றாக பந்து வீசி தலா 3 விக் கெட் எடுத்தனர். டொகாடி அவர்களுக்கு பக்கபலமாக பந்து வீசி னார். 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் தலை மையில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப் டன் ஆம்லா தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

முன்னதாக இரு அணிகளுக்கு இடையே இரண்டு 20 -க்கு 20 போட்டி நடந்தது. இதில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றதால் இந்தத் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனானது. 

இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி செஞ்சுரியன் மை தானத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி விளையாடும் போது மழை மற்றும் போதிய வெளிச்சமி ன்மை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. 

இதனால் போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய ணி இறுதியில், 29 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 183 ரன் எடுத்தது. இதில் ஒரு வீரர் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். 

முன்னாள் கேப்டன் பாண்டிங் அதிகபட்சமாக, 77 பந்தில் 63 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். தவிர, கேப்டன் மைக்கேல் கிளார்க் 48 பந்தில் 44 ரன்னையும், மைக் ஹஸ்சே 21 பந்தில் 30 ரன்னையும் எடுத்தனர். 

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரா  ன ஸ்டெயின் 49 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, 

ஆல்ரவுண்டர் காலிஸ் 1 விக்கெட் எடுத்தார். 

டக்வொர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்காவுக்கு 20 ஓவரில் 223 ரன் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பின்பு களம் இறங்கிய அந்த அணி தடுமாறியது. 

ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணி நிலைகுலைந்தது. அந்த அணி 22 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 129 ரன்னில் சுருண்டது. 

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 93 ரன் வித்தியாசத்தில் படுதோல் வியை தழுவியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொ டரில் ஆஸ்திரேலிய அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில், பெலிசிஸ் 20 பந்தில் 27 ரன்னை எடுத்தார். போத்தா 22 பந்தில் 25 ரன்னையும், கேப்டன் ஆம்லா 32 பந்தில் 24 ரன்னையும், காலிஸ் 15 பந்தில் 15 ரன்னையும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஜான்சன் 20 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். கும்மின்ஸ் 28 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, டொகெர்டி 2 விக்கெட்டையும், பொலிஞ்சர் மற்றும் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ரிக்கி பாண்டி ங் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்