முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 கேப்டன்கள் திட்டம் இந்தியாவுக்கு தேவையில்லை

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, அக். 21 - தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளைப் போல 2 கேப்டன்கள் திட்டம் இந்தியாவுக்கு தேவையில்லை என்று தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஜான்டி ரோட்ஸ் தெரிவித்து இருக்கிறார். 

முன்னாள் ஆல்ரவுண்டரான ஜான்டி ரோட்ஸ் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். அவர் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்து இருக்கிறார். 

தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தனித் தனி கேப்டன்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆஸி. அணியிலு ம் முன்பு இந்த முறை கடைபிடிக்கப்பட்டது. இதே போன்ற நிலைமை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் டெஸ்ட் போட்டிக்கு கும்ளே கேப்டனாகவும், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கு தோனி கேப்டனாகவும் பணியாற்றினார்கள். கும்ளே ஓய்வு பெற்ற பிறகு, தோனிக்கு டெஸ்ட் கேப்டன் பொறுப்பு

ம் வழங்கப்பட்டது. 3 நிலையிலும் அவருக்கு கேப்டன் பதவி உள்ளது. இதற்கிடையே தோனிக்கு ஓய்வு கொடுக்கும் பொருட்டு கேப்டன் பதவியை பிரித்துக் கொடுப்பது பற்றி கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு உள்ளது. 

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 3 நாடுகள் போட்டிக்கு பிறகு இரு கேப்டன்கள் முறையை பின்பற்ற கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தோனி டெஸ்ட் போட்டியில் மட்டும் கேப்டனாக இருப்பார். ஒரு நாள் போட்டிக்கு காம்பீரும், 20 ஓவர் போட்டிக்கு ரெய்னாவும் கேப் னாக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் கேப்டன் பதவியை பிரித்துக் கொடுக்கும் திட்டம் இந்தியாவுக்கு தேவையில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது - 

தோனி கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்படுகிறார். அவரது தலை மையில் இந்திய அணி உலகக் கோப்பயை வென்றுள்ளது. டெஸ்டில் நம்பர் - 1 இடத்தை பெற்றுக் கொடுத்தார். இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் தோற்றதற்தாக மட்டும் அவரை விமர்சிக்கக் கூடாது. அவர் ஒரு திறமை வாய்ந்த கேப்டன். தோனி விருப்பப்பட்டால் தான் கேப்டன் பதவியில் இருந்து அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இரு கேப்டன்கள் திட்டம் இந்தியாவுக்கு தேவையில்லை. ஒரே கேப்ட

ன் முடிவு தான் சரியானது. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினால் விராட் கோக்லி, காம்பீருக்கு அந்த பதவியை கொடுக்கலாம். இருவருமே திறமை வாயந்தவர்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு காம்பீர் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டார். இங்கிலாந்து அணியில் 3 நிலைக்கும்  3 கேப்டன்கள் உள்ளனர். வெவ்வேறு திறமைகள் இருப்பதால் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு கேப்டன் அங்கு தேவை தான். இவ்வாறு ரோட்ஸ் கூறினார். 

தென் ஆப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டரான ஜான்டி ரோட்ஸ் 50 டெஸ்ட் போட்டியில் விளையாடி 2322 ரன்னும், 245 ஒரு நாள் போட்டியில் ஆடி 5923 ரன்னும் எடுத்துள்ளார். அவர் உலகின் தலை சிறந்த பீல்டராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago