முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்தில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் பீதி

ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

கிறிஸ்ட்சர்ச்,அக்.23 - நியூசிலாந்தில் தெற்கு பசிபிக் கடலில் கெர்மாடெக் தீவுகள் உள்ளன. நேற்று அதிகாலை அங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பூமி அதிர்ந்தது. கட்டிங்கள் குலுங்கின. அப்போது நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் கண்விழித்தனர்.  நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம்  பிடித்தனர். விடியவிடிய ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதற்கியையே 7.6 ரிக்டர் அளவில் நிலநிடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ரவுல்தீவை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 24 மைல் ஆழ்த்தில் நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக வழக்கத்தைவிட மிக உயரமாக அலைகள் எழும்பின. எனவே சுனாமி ஏற்படும் என முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  ஆனால், சுனாமி மையம் எச்சரிக்கை எதுவும் விடவில்லை.  இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 

கடந்த பிப்ரவரி மாதம் இங்குள்ள 2-வது மிகப்பெரிய நகரமான கிறிஸ்ட்சார்ச் நகரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் 181 பேர் உயிர் இழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்