முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹ்ரைனில் அமெரிக்க தூதரகம் முற்றுகை

செவ்வாய்க்கிழமை, 8 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

மனாமா,மார்ச்.- 9 - பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஷியா பிரிவு முஸ்லீம்கள் போராட்டம் நடத்தினர்.  பஹ்ரைனில் அரசுக்கு எதிராக கடந்த பல நாட்களாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மனாமாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு கூடிய ஷியா பிரிவு முஸ்லீம்கள் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

அப்போது டுனிசியா, எகிப்தில் ஆட்சி மாற்றம் நிகழ உதவியது போல பஹ்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட அமெரிக்கா ஆதரவளிக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறினர். மேலும் பஹ்ரைனில் ஈரான் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி விடக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலிபாபின் சல்மான் அல் கலிபாவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஷியா பிரிவு முஸ்லீம்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்