முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசா கட்டணத்தை குறைக்க இலங்கையிடம் இந்தியா கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, அக். - 25 - விசா கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.  தெற்கு ஆசிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்களிடம் விசா கட்டணமாக ரூ. 2,500 ஐ வசூலிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இது அதிகமாக இருப்பதாக இலங்கையில் உள்ள தூதரகம் மூலம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு குடியேற்றத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி கலானானந்தா பெரேரோ தெரிவித்தார்.  இலங்கையில் வரும் ஜனவரி முதல் மின்னணு பயண அனுமதி வழங்கும் முறை அமலுக்கு வருகிறது. இதையடுத்து இலங்கைக்கு வரும் பயணிகள் பிரவுசிங் கட்டணமாக 50 டாலரை செலுத்த வேண்டும். மாலத் தீவுகள் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வருபவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புதிய முறை அமலுக்கு வந்த பிறகு அந்நாட்டினர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்