முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா செல்வதை தவிர்க்குமாறு 5 நாடுகள் எச்சரிக்கை

புதன்கிழமை, 26 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, அக். 26 - இந்தியாவில் தீபாவளி பண்டிகை மற்றும் பக்ரீத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு என பண்டிகைகள் தொடர்ந்து வரவுள்ளன. பண்டிகை சீசனில் மக்கள் கூடும் இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்த முயற்சி செய்ய கூடும் என்று பல்வேறு நாட்டின் உளவுத் துறைகள் அறிவித்துள்ள நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, நியுசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய 5 நாடுகள் தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு தற்சமயம் இந்தியா செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளன. ஒருவேளை அவர்கள் சென்றால் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இணையதளங்களில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளது. பலர் தங்களது சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டனர். இந்தியா குறித்து தேவையில்லாமல் அச்ச உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவு துறை மூலம் 5 நாடுகளுக்கும் தெரிவிக்க சுற்றுலா துறை கோரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்