முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்டில் ஹர்பஜன்

புதன்கிழமை, 26 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, அக். 26 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தி யாவின் முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கலந்து கொள்ள இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற் பந்து வீச்சாளர்களில் ஒரு வர் ஹர்பஜன் சிங். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அவர் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது பந்து வீச்சு சிறப்பாக இல்லாததால் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில், மே.இ.தீவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் ஹர்பஜன் சிங் இடம் பெறுகிறார் என்று தெரிகிறது. அவர் டெஸ்ட் அணியில் இடம் பெறுவதை கேப்டன் தோனியும் விரு ம்புகிறார். 

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஹர்பஜன் சிங் தனது திறமையை வெ ளிப்படுத்தினார். இதனால் அவர் இடம் பெறுவது உறுதி. மே.இ.தீவு க்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 சுழற் பந்து வீரர்கள் தேர்வு செய்யப் படுகிறார்கள். 

இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இதனால் அவருக் கு வாய்ப்பு கிடைக்கும். ஓஜா, அமித் மிஸ்ரா ஆகியோரில் ஒருவருக் கு வாய்ப்பு கிடைக்கும். ஹர்பஜன் சிங், அஸ்வின், அமித் மிஸ்ரா, ஓஜா ஆகிய 4 பேரில் 3 பேர் தேர்வு பெறுகிறார்கள். 

காயம் அடைந்து அணியில் விளையாடாமல் இருக்கும் டெண்டுல்கர், சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம் பெறுவா ர்கள். ஒரு நாள் தொடரில் விராட் கோக்லி நன்றாக விளையாடி வரு கிறார். இதனால் அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு உள்ளது. 

தவிர, இஷாந்த் சர்மா, பிரவீன் குமார் ஆகிய வேகப் பந்து வீரர்களும் மே.இ.தீவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறுவார்கள். உமேஷ் யாதவ், வருண் ஆரோன் , ஸ்ரீசாந்த் ஆகிய 3 பேரில் இருவர் அல்லது ஒருவர் தேர்வு பெறலாம். 

மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 6 -ம் தேதி டெல்லி பெரோசா கோட்லா மை தானத்தில் துவங்குகிறது. 

நவம்பர் 26 -ம் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. நவம்பர் 29 -ம் தேதி ஒரு நாள் தொடர் தொடங்குகிறது. டிசம்பர் 11 -ம் தேதியு டன் ஒரு நாள் தொடர் முடிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago