முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழுகிய நிலையில் கடாபி உடல்: ரசித்த மக்கள்

புதன்கிழமை, 26 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

திரிபோலி, அக். 26  - புரட்சி படையினரால் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் உடல் தரையில் போட்டு வைத்திருந்த நிலையில் அது தற்போது அழுக ஆரம்பித்து விட்டது. இதையடுத்து உடலை வேறு இடத்திற்கு மாற்றியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடாபியின் சொந்த ஊரான ஷிர்டேவில் வைத்து பிடிபட்ட கடாபி மற்றும் அவரது மகன் முட்டாசின் ஆகியோர் புரட்சிப் படையினரால் கொல்லப்பட்டனர். கடாபியின் உடலை தெருவில் இழுத்து வந்து சரமாரியாக அடித்து கொலை செய்தனர். அவரது மகன் முட்டாசின்னை ஒரு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து பின்னர் கொலை செய்தனர். இதையடுத்து கடாபி, முட்டாசின் மற்றும் கடாபி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர் யூனிஸ் ஆகியோரின் உடல்களை மிஸ்ரடா நகருக்கு கொண்டு வந்து அங்குள்ள இறைச்சி பாதுகாக்கும் இடத்தில் வைத்திருந்தனர். 

பின்னர் மக்களை பார்க்க அனுமதித்தனர். இதையடுத்து ஏராளமானோர், பெரும்பாலானோர் மற்றும் கடாபியின் எதிர்ப்பாளர்கள் ஆகியோர் நீண்ட கியூ வரிசையில் நின்று கடாபியின் உடலை பார்த்து சென்றனர். பலர் அதனை புகைப்படம் எடுத்தனர். இந்த நிலையில் கடாபி உள்ளிட்டோரின் உடல்கள் அழுக தொடங்கின. இதையடுத்து அவற்றை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்தனர். அதன்படி மூவரின் உடல்களும் மாற்றப்பட்டன. பின்னர் அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக புரட்சி படையை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். 

இருப்பினும் உடல் அடக்கம் எங்கு நடைபெறப் போகிறது என்பது தெரியவில்லை. ரகசிய இடத்தில் உடல்களை புதைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து புரட்சி படையை சேர்ந்த இப்ராகிம் பெய்தமால் என்பவர் கூறுகையில், உடல்கள் எங்கு அடக்கம் செய்யப்படும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் உடல் அடக்கத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டது என்று தெரிவித்தார். கடந்த 4 நாட்களாக லிபிய மக்கள் கடாபியின் உடலை பார்த்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago