முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பங்கஜ் அத்வானி அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

லீட்ஸ், அக். - 30  - இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷி ப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரரான பங்கஜ் அத்வானி வெற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறி னார். காலிறுதிச் சுற்றில் பங்கஜ் அத்வானி சகநாட்டு வீரரான தேவேந்திர ஜோஷியுடன் மோதினார். இதில் அத்வானி 279 புள்ளிகள் வித்தியாசத் தில் ஜோஷியை தோற்கடித்தார். உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டி ல் உள்ள முக்கிய நகர்களில் ஒன்றான லீட்சில் கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.  இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீர ர்கள் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போட்டி தற்போது அரை இறு திக் கட்டத்தை எட்டி உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதனைக் கண்டு பில்லியர்ட்ஸ் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். ஆடவருக்கான காலிறுதிச் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் இந்தி யாவைச் சேர்ந்த முன்னணி வீரர்களான பங்கஜ் அத்வானி மற்றும் தே வேந்திர ஜோஷி இருவரும் பலப்பரிட்சை நடத்தினர். இந்தக் காலிறுதியில் அத்வானி மொத்தம் 721 புள்ளிகள் பெற்று வெற் றி பெற்றார். அவரது சராசரி 32 விசிட்டுகளில் 31.25 ஆகும். 1000 போ   ட்டிகளில் அவரது சராசரி 22.53 ஆகும். நார்த்தர்ன் ஸ்னூக்கர் மையத்தில் நடந்த இந்தப் போட்டியில் அத்வா னி 4 முறை (புள்ளிகளில்) சதத்தை (147, 135, 133 , 120) கடந்தார்.  ஆனால் ஜோஷி 2 முறை (153, 109), தான் சதத்தை கடந்தார். இந்தப் போட்டியின் முதல் பாதியில் ஜோஷியின் கை ஓங்கி இருந்தது. அவர் 42 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று இருந்தார். ஆனால் 2-வது பா தியின் போது, அத்வானி அபாரமாக ஆடி தொடர்ந்து புள்ளிகள் பெற் று முன்னேறினார். பின்பு 1000 - இலக்கை தொட்டதால் அரை இறுதி வாய்ப்பை பெற்றார். அடுத்து நடக்க இருக்கும் அரை இறுதிச் சுற்றில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி, இங்கிலாந்து வீரர் மைக் ரஸ்சலைச் சந்திக்கிறார். மற்றொ ரு காலிறுதியில் இந்திய வீரர் ரூபேஷ் ஷா, இங்கிலாந்து வீரர் டேவிட் காசியரிடம் 545 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் டேவிட் சிறப்பாக ஆடினார். இந்திய வீரர் ரூபேசால் அவருக்கு ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. அவரது சராசரி 12.64 ஆகும். தவிர, அவர் ஒரு முறை மட்டும் 217 புள் ளிகளைப் பெற்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்