முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹர்பஜன் மீண்டும் நீக்கம் புதுமுகங்களுக்கு வாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா,அக்.- 30 - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் ஹர்பஜனுக்கு இடம் கிடைக்கவில்லை. தமிழக வீரர் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்டு அவருக்கு பதில் விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடாத இஷாந்த் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார். வகப்பந்து வீச்சாளர் பிரவீண்குமார், சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் வருண் ஆரோண், உமேஷ்யாதவ், பேட்ஸ்மேன் அஜிங்க்யாரஹானே, லெக் ஸ்பின்னர் ராகுல் சர்மா, என 4 புதுமுகங்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். ராகுல் திராவிட், லட்சுமணன், பிரக்யான் ஓஜா, ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்,. கொல்கத்தாவில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில் ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழுவினர் அணியைத் தேர்வு செய்தனர். முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 6 முதல் 10 வரை டெல்லி பெரோஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அணி விவரம்: தோனி(கேப்டன்), கம்பீர், சேவாக், திராவிட், சச்சின், லட்சுமண், யுவராஜ்சிங், அஸ்வின், ஓஜா, இஷாந்த் சர்மா, உமேஸ்யாதவ், கோலி, ஆரோன், ரஹானே, ராகுல்சர்மா ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்