முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கபடி போட்டி

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி,நவ.1 - டெல்லி அருகே உலகக்கோப்பை கபடி போட்டி நடக்கிறது. இதற்கு முதல் பரிசாக ரூ. 2 கோடி வழங்கப்படுகிறது. அதிக வீரர்களை மடக்கிப் பிடிப்பவர்களுக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்படுகிறது. டெல்லி அருகே பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரத்தில் ஐ.பி.எல். பாணியில் உலகக்கோப்பை கபடி போட்டி ஒரு கிராமத்தில் நடைபெறுகிறது. கபடிப்போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அங்கு நடந்து வருகிறது. இன்று அங்கு போட்டி தொடங்குகிறது. அதன் பிறகு பல்வேறு இடங்களில் பஞ்சாப் மாநிலம் முழுவதும் நடக்க இருக்கிறது.

 இந்தப்போட்டியில் இந்தியா உட்பட 14 நாடுகள் பங்கேற்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் பங்கேற்கின்றன. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வீரர்களே இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் அணியில் முழுவதுமாக இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியில் உள்ள 30 பேரில் 29 பேர் பஞ்சாபிகள். வெளிநாட்டு அணிகளிலும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர். இந்த போட்டி பஞ்சாப் மாநில கபடி வீரர்களின் பாணியில் நடைபெறவுள்ளது. 

ஒருவர் எதிரணியில் பாடி விளையாடும் போது ஒரு வீரர்தான் அவரை மடக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து மடக்கக்கூடாது. இதுபோன்ற பல விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 2 கோடி பரிசாக வழங்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட ஒரு கோடி அதிகமாகும். 2 ம் அணிக்கு ரூ. ஒரு கோடியும், வெற்றி பெறும் 3 ம் அணிக்கு ரூ. 51 லட்சமும் பரிசாக வழங்கப்படும். 

உலகக்கோப்பை போட்டியின் போது கடந்த ஆண்டு இந்திய அணிதான் வெற்றி பெற்றது. இந்த முறையும் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் பெண்களுக்கான போட்டியும் நடைபெறுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா,இங்கிலாந்து, துருக்மேனிஸ்தான் ஆகிய 4 நாட்டு அணிகள் பங்கேற்கின்றன. வெற்றி பெறும் பெண்கள் அணிக்கு முதல் பரிசு ரூ. 25 லட்சமும், 2 ம் அணிக்கு ரூ. 15 லட்சமும், 3 வது, 4 வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு ரூ. 10 லட்சமும் கிடைக்கும். ஆண்கள் அணியிலும், பெண்கள் அணியிலும் எதிரணி வீரரை மடக்கி பிடிக்கும் சிறந்த வீரருக்கும் அதே போல் எதிரணிக்கு சென்று அதிக வீரர்களை அவுட்டாக்கும் வீரர்களுக்கும் டிராக்டர் பரிசாக வழங்கப்படும். இன்று ஆரம்பமாகும் இந்த போட்டி 20 ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு டிக்கெட் கிடையாது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்