முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்முலா ஒன் கார் பந்தயம்: ரெட்புல் வீரர் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கிரேட்டர் நொய்டா, நவ.1 - பார்முலா ஒன் இந்தியன் கிராண்ட் ப்ரீ கார் ரேஸ் போட்டியில் ரெட்புல் அணி வீரர் செபஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்த சீசன் எப் 1 போட்டியில் 11 வது வெற்றியை பதிவு செய்துள்ளார் வெட்டல். ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி விட்ட இவர், அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் எப் ஒன் போட்டியில் 13 வெற்றிகளைப் பெற்றுள்ள மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்து விடுவார். இந்தியாவில் முதல் முறையாக டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் மைதானத்தில் எப் ஒன் கார் ரேசின் 17 வது சுற்று நடைபெற்றது. பந்த தூரத்தை ஒரு நிமிடம் 30.35 வினாடிகளில் கடந்து முதலிடம் பெற்றார் ரெட்புல் டிரைவர் செபஸ்டியான் வெட்டல்.

இதற்கு அடுத்தபடியாக மெக்லாரன்ஸ் அணி வீரர் ஜென்சன் பட்டன் 2 வது இடத்தை பிடித்தார். அவர் ஒரு நிமிடம் 30.43 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். பெராரி கார் டிரைவர் பெர்னாண்டோ அலோன்ஸா 3 வது இடத்தையும், ரெட்புல் டிரைவர் மார்க் வெப்பர் 4 வது இடத்தையும், 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான மெர்ஸிடஸ் வீரர் மைக்கேல் ஷூமாக்கர் 5 வது இடத்தையும் பிடித்தனர். 

17 சுற்றுக்களின் முடிவில் வெட்டல் 374 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2 வது இடத்தில் உள்ள ஜென்சன் பட்டன் 240 புள்ளிகளை பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பெர்னாண்டோ அலோன்ஸா 227 புள்ளிகளுடன் 3 வது இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்