முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபநாசம் அணை நீர் மட்டம் 30 அடி உயர்வு

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை, நவ.1 - நெல்லை மாவட்டம் மலைப் பகுதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பாபநாசம் அணையின் நீர் மட்டம் கடந்த ஒரு வாரத்தில் 30 அடி கூடியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். 

அணைக்கு 6245 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 48.75 அடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 106 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள குண்டாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. 

இந்த நிலையில் நெல்லைக்கு சுற்றுலா வந்த மருந்து கம்பெனி விற்பனை பிரதிநிதி முகமது அன்சாரி கருப்பன்துறை ஆற்றுப் பாலம் அருகே குளித்துக் கொண்டிருந்த போது தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் சிக்கி பலியானார். 

குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடை குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மாதேவி, கடையம், ஆழ்வார்குறிச்சி, மேலப்பாளையம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பாபநாசம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அகஸ்தியர் அருவியிலும், பானதீர்த்த அருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சேர்வலாறு அணை, லோயர்டாம் அணை ஆகியவற்றில் இருந்து 48 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் ஓரளவு நெல்லை மாவட்டத்தில் மின் தட்டுப்பாடு நீங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்