முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி முருகன் மலைக் கோயிலில் சூரசம்ஹாரம்

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

பழனி, நவ.1 - பழனி முருகன் மலைக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சூரசம்ஹாரம் முக்கிய திருவிழாவாகும். இத்திருவிழாவிற்கு மதுரை, கோவை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தவண்ணம் இருப்பர். கடந்த 26 ம் தேதி தீபாவளியன்று காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினர். நேற்று சூரசம்ஹார லீலையையொட்டி மலைக்கோயில் திருஆவினன்குடி கோயில் சன்னதிகள் அடைக்கப்பட்டிருந்தன. முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்தில் சக்திவேலுடன் மாலை 5 மணிக்கு பாதவிநாயகர் கோயிலுக்கு வந்தார். அதன்பின் 5.30 மணியளவில் வடக்கு கிரி வல வீதியில் தாரகாசுரவதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரவதமும், மேற்குகிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடைபெற்றது. அதன் பின்னர் ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பழனி மலைக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(இன்று) காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு கோயில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தி வைக்கிறார். திருக்கோயில் நிர்வாக அதிகாரி ராஜா, துணை ஆணையர் மங்கையற்கரசி, உதவி ஆணையர் நடராஜன், பேஸ்காரர்கள் பன்னாடி முருகேஷ், ராமலிங்கம், வீரமணி, பன்னீர், பழனி ஆர்.டி.ஓ. வேலுச்சாமி, தாசில்தார் மனோகர், நகர் மன்ற தலைவர் வேலுமணி, உப தலைவர் முருகானந்தம், பழனி நகர செயலாளர் பரதன், பழனி யூனியன் பெருந்தலைவர் ஏ.டி. செல்லசாமி, வேணுகோபாலு எம்.எல்.ஏ. சித்தனாதன் அன்ஸ் சிவனேசன், பழனிவேல், கந்தவிலாஸ் செல்வகுமார், மாவட்ட பொருளாளர் குமாரசாமி, அரிமா சுந்தரம், தாராபுரம்பெரியசாமி, ஸ்ரீநாடார்பாலன், முருகனடிமை பாலசுப்பிரமணியம், பிரசாத ஸ்டால் அரிகரமுத்து மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago