முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதி மீறல் கட்டிடங்களுக்கு ஆதரவாக சட்டம்

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ.1 - சென்னையில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கட்டிடஉரிமையாளர்களுக்கு ஆதரவாக தி.மு.க. அரசு அவசர கூட்டம் கொண்டு வந்தது மேலும் பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் உயர்நீதிமன்றதீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கும் சென்று குட்டுபட்டது. சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி ஒரு பொது நல வழக்கு ஒன்றை 2006 ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இதில் விதிமுறைகளை மீறிகட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி ஐகோர்ட் உத்தரவிட்டது. அதை நடைமுறை படுத்த வேண்டிய தி.மு.க அரசு விதிமுறைகளை மீறிய கட்டிட உரிமையாளர்களுக்கு ஆதரவாக அவசர சட்டம் ஒன்றை 2007ம் ஆண்டு கொண்டு வந்து நடவடிக்கையை நிறுத்திய தோடல்லாமல் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சி.எம்.டி.ஏ. மூலம் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.  ஆனால் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியானதே அதை உடனே அமல் படுத்துங்கள் என்று உத்தரவிட்டது. இதனால் செய்வதரியாமல் திகைத்து நின்றனர். மறுபுறம் தி.மு.க. கொண்டு வந்த அவசர சட்டமும் காலாவதியானது இடையில் இந்த நடவடிக்கைகள் வேறுபல காரணங்களால் தாமதப்படுத்தப்பட்டது. நடவடிக்கை எடுக்க வேண்டிய மேயரும், சி.எம்.டி.ஏ. சேர்மன் பரிதி இளம் வழுதியும் செயலற்று இருந்தனர். மேயர் ஒருபடி மேலே போய் மீடியாக்களை அழைத்து கொண்டு தமிழில் பெயர் பலகை வைப்பதை உலக மகா சாதனை போல் அமல்படுத்துவது பற்றியும் வைக்காவிட்டால் நடவடிக்கை என்றும் பிரபலபடுத்தினார்.

இதில் குறிப்பிடதக்க வேண்டிய விஷயம் இந்த நடவடிக்கையில் தி.மு.க.வின் தென்சென்னை மாவட்ட செயலாளரும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகனுக்கு சொந்தமான கடையும் ஒன்று.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்