முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுசக்தி மின் திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

சிங்கபூர்,நவ.1 - ஆயில் மற்றும் கியாஸ் விலை அதிக அளவில் உயர்ந்துவிட்டதால் சிவில் அணுசக்தி மின்சார உற்பத்தி திட்டங்களை இந்தியா கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி ஏஜன்சி முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அணுசக்தி மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு சர்வதேச அணுசக்தி ஏஜன்சி அனுமதி அளித்தால்தான் அதற்கான மூலப்பொருட்களை அணுசக்தியில் வளர்ச்சி அடைந்த நாடுகள் அளிக்கும். சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் முன்னாள் இயக்குனர் நபாவோ தனாகா நேற்று சிங்கபூர் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மின்சார உற்பத்திக்கு தேவையான ஆயில் மற்றும் கியாஸ் விலை அதிக அளவு உயர்ந்துவிட்டது. இதை சர்வதேச சந்தையில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டுமென்றால் இந்தியா அதிக தொகை கொடுக்க நேரிடும். அதை இந்தியாவால் தாங்க முடியாது. அதனால் சிவில் அணுமின் திட்டங்களை இந்தியா தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் மின்தேவையை ஒரு நியாயமான செலவில் பூர்த்தி செய்ய முடியும் என்றார். சிவில் அணுமின் உற்பத்திக்கான தொழில்நுட்பத்தை அடைவதில் இந்தியா ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நெருக்கமாக தொடர்பு வைத்துள்ளது. இந்தியாவில் நகர்ப்புறங்களும் அதிகமாக இருக்கிறது நகரப்புற தொழில் வளர்ச்சிக்கும் இதர தேவைகளுக்கும் மின்சாரம் அதிக தேவையாக இருக்கிறது. இதற்கு அணுமின் உற்பத்தி மிகவும் உபயோகமாக இருப்பதோடு தேவையையும் பூர்த்தி செய்யும். இந்தியா தொழில்நுட்பத்தில் எவ்வளவோ முன்னேறிவிட்டது. அதேசமயத்தில் சிவில் அணுமின் உற்பத்தி விஷயத்தில் சீனாவை போல் இந்தியாவும் சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் உள்ளது தனகா கூறினார். 

கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 80 அமெரிக்க டாலர் வரை உயர்ந்துவிட்டது. இது மேலும் அதிகரிக்கலாம். இதனால் இந்தியா போன்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். இந்தியாவில் வருகின்ற 2030-ம் ஆண்டிற்குள் 40 ஆயிரம் மெகாவட் அணுமின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின்சார நிலைய சம்பவத்தால் இது பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தனகா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்