முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறக்கட்டளை உறுப்பினர் மீது தாக்கு: ஐசரி கணேஷ் கைது

புதன்கிழமை, 2 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ. 2 - சென்னை பச்சையப்பன் அறக்கட்டளை தலைவராக உள்ள ஐசரி கணேஷ் அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக புகார் வந்ததன் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக இருந்தவர் ஐசரி வேலன். எம்.ஜி.ஆர். மீது மிகுந்த விசுவாசம் கொண்டவர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர். துணை அமைச்சராகவும் இருந்தவர். இவரது மகன் ஐசரி கணேஷ். இவர் தந்தை மறைவிற்கு பிறகு ஐசரி கணேஷ் தி.மு.க.வுடன் நெருக்கமானார். தி.மு.க.வுடன் உள்ள நெருக்கத்தினால் பச்சையப்பன் டிரஸ்டி தலைவரானார். இவர் சொந்தமாக வேல்ஸ் கல்வி நிறுவனங்கள் மற்றும் இன்ஜினியரிங் காலேஜ் நடத்தி வருகிறார். அதன் துணைவேந்தராக உள்ளார். 

இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற பச்சையப்பன் டிரஸ்டி கூட்டம் ஒன்றில் ஐசரி கணேஷை கேள்வி கேட்ட டிரஸ்டி உறுப்பினர் சிவசுப்பிரமணியத்தை ஐசரி கணேஷ் மற்றும் இருவர் கடுமையாக தாக்கியதாக பாதிக்கப்பட்ட சிவசுப்பிரமணியம் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் பேரில் கீழ்ப்பாக்கம் போலீசார் நேற்று காலை பாலவாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷின் வீட்டிற்கு சென்று அவரை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஐசரி கணேஷ் சிவசுப்பிரமணித்தை தாக்கியது உண்மை என தெரிய வந்ததன் பேரில் ஐசரி கணேஷ் மீது பிரிவு 506(2), 307-ன் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தாக்குதல் நடத்திய மோகன் மற்றும் சரவணன் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்