முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளம் வீரர்களை சேர்க்க இதுவே தருணம்: வெங்க்சர்க்கார்

புதன்கிழமை, 2 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.2 - இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களைச் சேர்க்க இதுவே நல்ல தருணம் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு முன்னாள் தலைவரான திலீப் வெங்க்சர்க்கார் தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு - தலைநகர் டெல்லியில் நிருபர்களைச் சந்தித்த அவர், இந்திய கிரிக்கெட் அணியின் நிலை, மே.இ.தீவு தொடர், ஆஸ்திரேலிய தொடர் குறித்த  அவர்களது கேள்விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது - 

கும்ளேவுக்கு பிறகு, தோனியை கேப்டனாக தேர்வு செய்தோம். அவ ர் மிகச் சிறந்த கேப்டன். அவர் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் ஏற்ப ட்ட தோல்வியின் போது கூட தனது அமைதி தன்மையை இழந்து விடவில்லை. 

இந்தியாவில் நடந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டார். இங் கிலாந்து தொடரினால் பல நல்ல விஷயங்கள் இந்திய அணிக்கு கிடை த்துள்ளன. உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோர் இருப்பதால் ஜாஹிர்கானுக்கு அழுத்தம் இனி குறையும். 

அடுத்ததாக, இந்தியா மற்றும் ஆஸதிரேலிய அணிகளுக்கு இடையே யான தொடர் நடக்க இருக்கிறது. அங்கு நமது வீரர்களில் பலர் விளை யாடிய அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் மூலம் நாம் நல்ல போட்டியை எதிர்கொள்ள முடியும். 

ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்ய வசதியாக மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இளம் வீரர்களை தேர்வு செய்து இருக் கிறார்கள். இதில் தேர்வுக் குழுவினர் நன்கு செயல்பட்டு இருக்கிறார் கள். 

இளம் வீரர்களை அறிமுகப்படுத்த இந்தத் தொடர் தான் சரியான தரு ணம். அப்போது தான் ஆஸ்திரேலியாவை எளிதாக எதிர்கொள்ள முடியும். 11 நல்ல வீரர்களை தேர்வு செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந் தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அங்கு நடந்த போட்டிகளில் டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் 20 -க்கு 20 போட்டி ஆகிய அனைத் திலும் தோற்று ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. 

அதே போல இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 5 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வாஷ் அவுட்டாக்கி தனது வஞ்சத் தை தீர்த்துக் கொண்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago