முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைனில் போதை பொருள் விற்பனை: 12,000 பேர் கைது

புதன்கிழமை, 2 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

பீஜிங், நவ.2- சீனாவில் ஆன்லைன் மூலமாக போதை பொருள்களை விற்பனை செய்த 12,125 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 300 கிலோவுக்கும் அதிமான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சீனாவின் லான்சூ பகுதியில் ஆன்லைன் மூலம் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்டர்நெட் சென்டர்களை கண்காணித்தனர். அங்கு ஆன்லைனில் குறிப்பிட்ட இணையதளங்கள் மூலம் போதை பொருள் விற்பனை செய்தவர்களை கைது செய்தனர். இதுவரை சுமார் 12,125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 300 கிலோவுக்கு அதிகமான போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டனர். 

இந்த குற்றத்திற்கு குறிப்பிட்ட இணையதளங்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று சீன செய்தி நிறுவனமான ஜிங்குவா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்