முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹர்பஜன் மீண்டும் அணியில் இடம் பெறுவார்: சேவாக்

புதன்கிழமை, 2 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, நவ. 2 - டெஸ்ட் அணியில் நீக்கப்பட்ட முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவார் என்று அதிரடி துவக்க வீரரான வீரேந்தர் சேவாக் நம்பிக்கை தெரிவித்தார். இது பற்றிய விபரம் வருமாறு -  இந்திய அணியின் முன்னணி சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். கும் ளே ஓய்வு பெற்ற பிறகு, முதன்மை சுழற் பந்து வீச்சாளராக திகழ்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டார். 

அவரது பந்து வீச்சு சிறப்பாக இல்லாததால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிய வருகிறது. அவரது நீக்கம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அவர் முத்தி ரை பதித்து இருந்தார். ஹர்பஜன் சிங் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர் பிஷன் சிங் பெடி கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில், ஹர் பஜன் இந்திய அணியில் விரைவில் இடம் பெறுவார் என்று அதிரடி வீரரான சேவாக் நம்பிக்கை தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது - நான் அணியில் இருந்து நீக்கப் பட்ட போது, உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணிக் கு திரும்பினேன். யுவராஜ் சிங்கிற்கும் இதே நிலை ஏற்பட்டது. 

அவரை அணியில் இருந்து நீக்கிய பிறகு, உள்ளூர் போட்டிகளில் சிறப் பாக விளையாடி அணிக்கு திரும்பினார். இதே மாதிரி ஹர்பஜன் சிங் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணிக்கு விரைவில் திரும்புவார் என்று 100 சதவீத நம்பிக்கை இருக்கிறது. நடைபெற இருக்கும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் அவர் அதிக விக்கெட்டுகளைக் கைப்ற்றி தேர்வுக் குழுவினரை தன் பக்கம் இழுக்க வைப்பார். தோள்பட்டையில் எனக்கு ஏற்பட்ட காயம் சரியாகி விட்டது. 

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரை அதிகம் எதிர் பார்த்து காத்திருக்கிறேன். மே.இ.தீவுக்கு எதிரான தொடரில் சிறப் 

பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

சிறப்பான தொடக்கத்தை கொடுப்பது தான் எனது பங்களிப்பாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளை  யாட வேண்டுமானால் இந்தத் தொடர் முக்கியத்துவவம் வாய்ந்தது. இவ்வாறு சேவாக் கூறினார். தோள்பட்டையில் எற்பட்ட காயம் காரணமாக சேவாக், இங்கிலாந் திற்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆடவில்லை. மேற்கண்ட காரண ங்களால் அவர் அணியில் இருந்து தூக்கி வீசப்பட்டார். 

டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட ஹர்பஜன் சிங் 98 டெஸ்ட் போட்டியில் விளையாடி 408 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். 320 ஓரு நாள் போட்டியில் பங்கு கொண்ட அவர் மொத்தம் 369 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago