முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் - புதுவையில் கனமழை தொடரும்

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.3 - குமரி முதல் தெற்கு ஆந்திர பகுதி வரை நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை நீடிப்பதன் எதிரொலியாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:-  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை​ தமிழகம் இடையே உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்கிறது. மழையின் காரணமாக காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலையில் இருந்தே சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இரவில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீnullர் வழங்கும் ஏரிகளான nullண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், போரூர் ஏரிகளுக்கு நீnullர்வரத்து அதிகம் வருகிறது. nullண்டி ஏரி பகுதியில் 19.4 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் 131 கனஅடி தண்ணீர் ஏரிக்கு வருகிறது. புழல் ஏரியில் 36 மி.மீ. மழை பெய்தது. அங்கு 349 கனஅடி தண்ணீர் ஏரிக்கு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 41 மி.மீ. மழை பெய்துள்ளதால் 544 கனஅடி தண்ணீர் வருகிறது. சோழவரம் ஏரி பகுதியில் 21 மி.மீ. மழை பெய்துள்ளதால் 104 கனஅடி தண்ணீர் ஏரிக்கு வருகிறது. வீராணம் ஏரி பகுதியில் 35 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் ஏரிக்கு 750 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் குடிநீnullர் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.நேற்று காலையிலும் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:​ நேற்று குமரி கடல் முதல் தெற்கு ஆந்திர வங்கக்கடல் வரை இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீnullடிக்கிறது. இது மன்னார் வளைகுடா மற்றும் தமிழகத்தையொட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல் வழியாக ஊடுருவி அதே இடத்தில் நிற்கிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. கடலூர், புவனகிரியில் 11 செ.மீ., தேக்கடியில் 10 செ.மீ., சின்ன கல்லார், மருங்காபுரி, மாமல்லபுரம் தலா 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்