முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்ட புகார்: பல பாகிஸ்தான் வீரர்கள் சிக்குகிறார்கள்

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், நவ.4 - இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே கடந்த ஆண்டு இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகள் நடந்தன. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோர் ஸ்பாட்பீசிங் எனும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இது பற்றி லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில் சல்மான்பட், முகமது ஆசிப் ஆகிய இருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. அவர்கள் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்தது. 

இந்த நிலையில் இங்கிலாந்தில் நடந்த 4 டெஸ்ட் போட்டிகளிலுமே ஸ்பாட்பீச்சிங் சூதாட்டம் நடந்ததாகவும்,  அதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் சூதாட்டம் நடந்ததாகவும் சர்வதேச கிரிக்கெட் சங்க ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் வீரர்களுடன் சூதாட்ட புரோக்கராக செயல்பட்ட மஜீத், அனுப்பிய எஸ்.எம்.எஸ். தகவல்களை ஸ்காட்லாந்து துப்பறிவு பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் மற்ற போட்டிகளிலும் சூதாட்டம் நடந்ததாக தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 

துபாய், இந்தியா, இங்கிலாந்தை சேர்ந்த சூதாட்டக்காரர்களுக்கு மஜீத் எஸ்.எம்.எஸ். தகவல்களை அனுப்பி உள்ளார். அதில் சூதாட்டம் தொடர்பாக பேரம் பேசியிருக்கிறார். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. பெரும்பாலான எஸ்.எம்.எஸ்.களை மஜீத் அழித்து விட்டார். ஆனாலும் போலீசாருக்கு கிடைத்துள்ள எஸ்.எம்.எஸ்.களில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இங்கிலாந்தில் நடந்த 4 டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவில் நடந்த 3 டெஸ்ட் போட்டிகள் ஆகியவை பற்றியும் ஐ.சி.சி. விசாரணை நடத்த உள்ளது. 

பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் காம்ரன் அக்மல், வகாப்ரியாஸ் ஆகியோரும் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. சூதாட்டத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள முகமது ஆசிப், சல்மான்பட் இருவரும் கூறும் போது, நாங்கள் மட்டும் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை. மேலும் பல பாகிஸ்தான் வீரர்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறினார்கள். எனவே மற்ற போட்டிகளிலும் விசாரணை நடத்தினால் மேலும் பல பாகிஸ்தான் வீரர்கள் சிக்குவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்