முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் குண்டு வெடித்து கட்டிடங்கள் தரைமட்டமானது 14 பேர் பலி

புதன்கிழமை, 9 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,மார்ச்.- 9 - பாகிஸ்தானின் பைசலாபாத்தில் புலனாய்வு துறை அலுவலகம் உள்ளது. அதன் அருகே சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் நிலையம் மற்றும் கட்டிடங்கள் உள்ளன. இப்பகுதியில் நேற்று பயங்கர குண்டு வெடித்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் அதிர்ந்து குலுங்கியது. இந்த சம்பவத்தில் கியாஸ் நிரப்பும் நிலையம் உட்பட 2 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.  மேலும் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25 க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். குண்டு வெடிப்பில் 14 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில் கியாஸ் நிரப்பும் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இது குறித்து புலனாய்வு துறை விசாரணை நடத்தி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்