முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய கேபிள் ஒழுங்குமுறைசட்டம் கொண்டு வரப்படும்- அம்பிகா சோனி

புதன்கிழமை, 9 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.- 9 - விரிவான முறையில் புதிய கேபிள் ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய பெண் அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்துள்ளார்.  தற்போது லைசென்ஸ் விதிமுறைகளின் கீழ் கேபிள் டி.வி. பதிவு செய்யப்படுகிறது. இதை மாற்றி அமைக்க வேண்டும் என்று டிராய் சிபாரிசு செய்துள்ளது. இந்த சிபாரிசு அடிப்படையில் விரிவான முறையில் கேபிள் ஒழுங்குமுறை சட்டம் புதியதாக கொண்டுவரப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி நேற்று லோக்சபையில் கேள்விநேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார்.

மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்களுக்கு தனியாக லைசென்ஸ் வழங்க வேண்டும் என்று தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையம் சிபாரிசு செய்துள்ளது. கேபிள் டி.வி ஆபரேட்டர்களில் இருந்து ஒரு வேறுபட்ட அமைப்பாக அங்கீரிப்பதற்காகவே மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்களுக்கு தனியாக லைசென்ஸ் வழங்க வேண்டும் என்று டிராய் சிபாரிசு செய்துள்ளது. இவ்வாறு டிராய் சிபாரிசு செய்திருப்பது குறித்து எனது அமைச்சகம் விரிவான முறையில் பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். விரைவில் விரிவான முறையில் கேபிள் ஒழுங்குமுறை சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருவோம் என்று அம்பிகா சோனி மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்