முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரிடம் ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை ஆசி

சனிக்கிழமை, 5 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, நவ.6 -  நேற்று முதல்வர் ஜெயலலிதாவிடம் ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை அனுசுயா நேரில் ஆசிப்பெற்றார். இதுகுறித்து அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை அனுசுயா, 56-வது உலக ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள செல்வதையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தமிழக முதல்வர் விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளித்தும் ஊக்குவித்தும், வீரர்களிடையே போட்டி மனப்பான்மையும், வெற்றி பெறும் அணுகுமுறைகளையும் வளர்க்கும் விதமாக, விளையாட்டுத்துறையில் தமிழகத்தின் பெருமையை உலகளவில் அறியச் செய்யப்பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைத்துக் கொடுத்த நேரு விளையாட்டு அரங்கத்திலுள்ள ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி தளத்தில் பயிற்சிப் பெற்ற சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி அனுசுயா, பிரேசில் நாட்டில் இம்மாதம் 14-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடைபெறவுள்ள 56-வது உலக ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிலிருந்து கலந்துக் கொள்ளும் ஆறு வீரர்களில் ஒருவராக  தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனுசுயா உலக ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள செல்வதையொட்டி நேற்று முதல்வர் ஜெயலலிதா அனுசுயா பிரேசில் நாட்டில் நடைபெறும் 56-வது உலக ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிப்பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago