முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கறுப்பு பணம் மீட்பு குறித்து பிரதமர் பதில்

சனிக்கிழமை, 5 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

கேன்ஸ், நவ.6 ​ கறுப்பு பணம் எப்போது மீட்கப்படும் என்பது குறித்த நிருபர்களின் கேள்விக்கு நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல என்று பிரதமர் பதிலளித்தார். பெட்ரோலை தொடர்ந்து மற்ற எரிபொருள்களுக்கும் தற்போதுள்ள விலை நிர்ணய கட்டுப்பாட்டை தளர்த்த திட்டமிட்டுள்ளதாக பிரான்சின் கேன்ஸ் நகரில் செய்தியாளர்களிடம் பிரதமர் தெரிவித்தார். 

இதன் மூலம் தற்போதைய பெட்ரோல் விலை உயர்வை அவர் மறைமுகமாக நியாயப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பணவீக்கம் ஒரு பிரச்சினைதான். அதே சமயம் ஒரு வகையில் அது வளர்ச்சிக்கான அடையாளமாகவும் உள்ளது. நாட்டில் தனி நபர் வருமானம் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். கறுப்பு பணம் எப்போது மீட்கப்படும் என்பதை சொல்ல நான் ஜோதிடர் அல்ல. இந்தியாவின் கோரிக்கையான வங்கி பணிகளில் வெளிப்படைத் தன்மை, வரி ஏய்ப்பு குறித்த தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை ஜி 20 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் பிரதமர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்