முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று இந்தியா - மே.இ. தீவு அணிகள் மோதும் டெஸ்ட்

ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, நவ. 6 -  இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி புதுடெல்லியில் இன்று துவங்கு கிறது. இந்திய அணி இதில் முத்திரை பதிக்குமா? மேற்கு இந்தியத் தீவுகள் அணி கேப்டன் டேரன் சம்மி தலைமையில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி தலை மையிலான அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண் ட டெஸ்ட்தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகியவை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 

மே.இ.தீவு மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ் ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மை தானத்தில் இன்று காலை 9.30 மணியளவில் துவங்க இருக்கிறது. 

மே.இ.தீவுக்கு எதிரான இந்தத் தொடரில் இந்திய அணி முழுத் திறமை யுடன் களம் இறங்குகிறது. எனவே இந்திய அணி இந்தத் தொடரில் முத்திரை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜாஹிர்கான் தவிர, டெண்டுல்கர், காம்பீர், யுவராஜ் சிங், சேவாக் ஆகியோர் இதில் பங்கேற்கிறார்கள். அவர்கள் காயத்திலிருந்து குணம டைந்து முழு உடற் தகுதியுடன் இந்தப் போட்டியில் ஆட உள்ளனர். 

சேவாக்கும், காம்பீரும் ஆட்டத்தை துவக்க இருக்கிறார்கள். 3 -வது வீரராக இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிரா விட் ஆட இருக்கிறார். தவிர, லட்சுமண் மற்றும் தோனி ஆகியோர் மிடில் ஆர்டரில் அணிக்கு வலு சேர்ப்பார்கள். 

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது, டெஸ்ட் போட்டியில் ராகு ல் டிராவிட் ஒருவர் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் அந்தத் தொடரில் 4 டெஸ்டில் 3 சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. 

கேப்டன் தோனியும் தற்போது பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளா ர். ஒட்டு மொத்தத்தில் இந்திய அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. எனவே மே.இ.தீவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பங்க ளிப்பை அளிக்கும் என்பது உறுதி. 

பெளலிங்கில், இந்திய அணி 3 வேகப் பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சுழ ற் பந்து வீச்சாளருடன் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இஷாந்த் சர்மா முதன்மை பந்து வீச்சாளராக செயல்படுவார். 

அவருக்கு பக்கபலமாக வருண் ஆரோன், உமேஷ்யாதவ் இருவரில் ஒருவர் இடம் பெறலாம் என்று தெரிய வருகிறது. முதன்மை சுழற் பந் து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்தத் தொடரில் இடம் பெறவில்லை. 

எனவே தமிழக வீரர் அஸ்வின் இடம் பெற வாய்ப்பு உள்ளது. அவர் முதன் முறையாக டெஸ்ட் அணியில் இடம் பெற்று உள்ளார். தவிர மற்றொரு சுழற் பந்து வீச்சாளரான ஓஜாவும் இடம் பெற வாய்ப்பு உள்ளது. 

சமீபத்தில் வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்த மே.இ.தீவு அணி அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் கைப்ப ற்றியது. எனவே அந்த அணி முழு தன்னம்பிக்கையுடன் இந்தத் தொட ரை சந்திக்கிறது. 

மே.இ.தீவு அணியில் சந்தர்பால், அட்ரியன் பரத், சாமுவேல்ஸ், டிவைன் பிராவா, கிரில் எட்வர்ட்ஸ், போன்ற சிறந்த பேட்ஸ்மேன்க ளும், கேமர் ரோச், ராம்பால், தேவேந்திர பிஷூ, டேரன் சம்மி, போன்ற சிறந்த பெளலர்களும் உள்ளனர். 

இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று துவங்கும் டெஸ்ட் போட்டி தூர்தர்ஷன் மற்றும் நியோ கிரிக்கெட் சேனல்கலில் நேரடி யாக ஒளிபரப்பாகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்