முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊக்கமருந்து புகாரால் உலக கோப்பை போட்டியிலிருந்து நீக்கப்பட்ட கபடி வீரர்

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

லூதியானா, நவ.- 7 - தவறான ஊக்கமருந்து புகாரால் உலகக் கோப்பை கபடி போட்டியில் பஞ்சாப் வீரர் ஒருவர் இடம்பெற முடியாத பரிதாப நிலை ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் தற்போது உலகக் கோப்பை கபடி விளையாட்டு நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில் 14 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்திய அணியில் இடம்பெறக்கூடிய வீரர்களை தேர்வு செய்யக்கூடிய நிகழ்ச்சி லூதியானாவில் கடந்த அக்டோபர் 22 ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் ஊக்கமருந்து உட்கொண்டதாக தெரியவந்தது.  இதில் பீர்பால் கவுர் என்ற வீரர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டதாக வந்த புகாரின் பேரில் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் மறு சோதனை செய்தபோது எந்தவித ஊக்க மருந்தையும் அவர் உட்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது. ஆகவே அவர் விளையாட முழுத்தகுதி பெற்றவர் என்பது மருத்துவர்களால் அக்டோபர் 31 ம்தேதி சான்றளிக்கப்பட்டது. இதனால் பீர்பால் கவுர் மகிழ்ச்சியடைந்தார். இருந்தாலும் அதை அவர் கொண்டாட முடியவில்லை. ஏனென்றால் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு முன்பாகவே வீரர்கள் தேர்வு முடிந்துவிட்டதால் பீர்பால் கவுர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இவர் 2008 ம் ஆண்டு ஆசிய கடற்கரை கபடி போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago