முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி கிரிக்கெட்டெஸ்ட் போட்டி இந்திய அணி முதல் இன்னிங்சில் 208 ரன்னில் ஆட்டம் இழந்தது

செவ்வாய்க்கிழமை, 8 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, நவ. - 8 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக புதுடெல்லியில் நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முத ல் இன்னிங்சில் 208 ரன்னில் ஆட்டம் இழந்தது. மே.இ.தீவு அணி தற் போது 116 ரன் முன்னிலை பெற்று உள்ளது. இந்திய அணியின் முதல் இன்னிங்சில் முதல் வரிசை வீரர்கள் 3 பேர் நல்ல துவக்கத்தை அளித்தனர். ஆனால் பின்பு வந்த வீரர்கள் அதனை சரியாக பயன்படுத்தாமல் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். இது வே இந்திய அணியின் சரிவிற்கு காரணமாக அமைந்தது. மே.இ.தீவு அணி தரப்பில், கேப்டன் டேரன் சம்மி, ராம்பால் மற்றும் பிஷூ ஆகியோர் நன்கு பந்து வீசி மொத்தம் 7 விக்கெட்டை வீழ்த்தி னர். எட்வர்ட்ஸ் மற்றும் சாமுவேல்ஸ் ஆகியோர் அவர்களுக்கு ஆதர வாக பந்து வீசினர்.  இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான முதல் கிரிக் கெட் டெஸ்ட் போட்டி புதுடெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.  முன்னதாக இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு அணி 108.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 304 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் சதமும், ஒரு வீரர் அரை சதமு ம் அடித்தனர்.  மே.இ.தீவு அணியின் மூத்த வீரரான சந்தர்பால் சதம் அடித்தது ஆட்ட த்தின் சிறப்பம்சமாகும். அவர் 196 பந்தில் 118 ரன்னை எடுத்தார். இதி ல் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் இஷாந்த் சர்மா வீசிய பந்தில் எல்.பி.டபிள்யு. வாகி வெளியேறினார்.  அடுத்தபடியாக, துவக்க வீரர் கே.சி. எட்வர்ட்ஸ் 212 பந்தில் 63 ரன் னை எடுத்தார். இதில், 4 பவுண்டரி அடக்கம். தவிர, கீப்பர் பாக் 71 பந்தில் 27 ரன்னையும், சாமுவேல்ஸ் மற்றும் கே.ஏ. எட்வர்ட்ஸ் ஆகி யோர் தலா 15 ரன்னையும், பொவெல் 14 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி தரப்பில், சுழற் பந்து வீச்சாளர் பிரக்ஞான் ஓஜா அபார மாக பந்து வீசினார். அவர் 72 ரன்னைக் கொடுத்து 6 விக்கெட் கைப் பற்றினார். அஸ்வின் 81 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். இஷாந்த் சர்மா 1 விக்கெட் எடுத்தார். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி மே.இ.தீவு அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 62.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 208 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

இந்திய அணி சார்பில் முதல் மூன்று வீரர்கள் நன்கு ஆடினர். ஆனால் மிடில் ஆர்டர் வரிசை வீரர்கள் மோசமாக ஆட்டம் இழந்ததால் இந்தி ய அணி குறைந்த ஸ்கோரில் அவுட்டானது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. 

துவக்க வீரர் சேவாக் அதிகபட்சமாக, 46 பந்தில் 55 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் பிஷூ வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரரான காம்பீர் 41 பந்தில் 41 ரன்னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். 

இறுதியில், அவர் சம்மி மூலம் ரன் அவுட்டானார். அடுத்தபடியாக டிராவிட் 111 பந்தில் 54 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்க ம். கடைசியில் அவர் ராம்பால் வீசிய பந்தில் அவுட்டானார். தவிர, யுவராஜ் சிங் 39 பந்தில் 23 ரன்னை எடுத்தார். 

இஷாந்த் சர்மா 41 பந்தில் 17 ரன்னை எடுத்தார். டெண்டுல்கர் 7 ரன்னி லும், லக்ஷ்மண் 1 ரன்னிலும், கேப்டன் தோனி பூஜ்யத்திலும் ஆட்டம் இழந்தனர். முன்னதாக சேவாக்கும், காம்பீரும் இணைந்து முதல் விக் கெட்டிற்கு 88 ரன் சேர்த்தனர். அதன் பின்பு சிறிது இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. 

மே.இ.தீவு அணி தரப்பில், டேரன் சம்மி 35 ரன்னைக் கொடுத்து 3 விக் கெட் கைப்பற்றினார். ராம்பால் மற்றும் பிஷூ ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். தவிர, எட்வர்ட்ஸ் மற்றும் சாமுவேல்ஸ் ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

அடுத்து 2 -வது இன்னிங்சைத் துவக்கிய மே.இ.தீவு அணி 2 -வது நாள் ஆட்ட நேர முடிவில், 13.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்னை எடுத்து இருந்தது. ஓஜா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த மைதானத்தில் சுழற் பந்து வீச்சு நன்கு எடுபடுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்