முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெண்டுல்கர் தொப்பி வழங்கியது இன்ப அதிர்ச்சி அளித்தது - அஸ்வின்

செவ்வாய்க்கிழமை, 8 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

டெல்லி, நவ. - 8 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர் எனக்கு தொப்பி வழங்கியது இன்ப அதிர்ச்சி அளித்தது என்று இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளரான அஸ்வின் தெரிவித்தார். இது பற்றி ய விபரம் வருமாறு -  மே.இ.தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ் வின் விளையாடி வருகிறார். அவர் முதல் நாள் ஆட்டத்தின் போது 2 விக்கெட் வீழ்த்தினார். போட்டி குறித்து அவர் கூறியதாவது -  டெஸ்ட் போட்டியில், நான் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிற து. என்னைப் போன்ற பல வீரர்கள் டெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்து தான் கிரிக்கெட்டுக்கு வந்தோம்.  டெண்டுல்கரே என்னை கெளரவப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. எனது டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை டெண்டுல்கர் எனக்கு வழ ங்கினார். இது எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.  பந்து வீச்சாளரை பொறுத்தவரையில் கடுமையாக உழைத்தால் நல்ல நிலைக்கு வரலாம். நேற்றைய போட்டியில் நான் சிறப்பாக ஆடிய தாக கருதுகிறேன். இன்றும் கூட கூடுதலாக ஒரு விக்கெட்டை வீழ்த்த லாம் என்று கருதினேன்.  இந்த  போட்டியை நான் திட்டமிடட்டு விளையாடி வருகிறேன். மை தானமும் சுழற் பந்துக்கு சாதகமாக இருக்கிறது. எனவே தான் இந்த விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது.  உள்ளூர் போட்டிகளில் எவ்வளவோ நான் சாதித்தாலும் சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதிப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சாதனை நிகழ்த்த வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கேப்டன் டேரன் சம்மி தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது.  இதன் முதல் போட்டி டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மை தானத்தில் நடந்து வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago