முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 இணையதளங்களை முடக்கியது இலங்கை

புதன்கிழமை, 9 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

கொழும்பு, நவ. - 9 - இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களையும், அதிகாரிகளையும் இழிவுபடுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் 5 இணையதளங்களின் செயல்பாட்டை இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் முடக்கி வைத்துள்ளது.  லங்கா நியூஸ், ஸ்ரீலங்காமிரர்.காம், ஸ்ரீலங்கா கார்டியன்.காம், பப்பராஸிகாசிப்9.காம், லங்காவே நியூஸ்.காம் ஆகிய 5 இணைய தளங்களின் செயல்பாட்டை முடக்கி வைத்துள்ளதாக ஆணையத்தின் தலைவர் அனுஷா பல்பிடா தெரிவித்தார். இந்த நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்று பல்வேறு ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இலங்கை அதிபர் ராஜபக்சே, அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பற்றி தனிப்பட்ட முறையில் இந்த இணையதளங்கள் விமர்சித்து வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்