முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவநிலை மாற்றத்தினால் 3 ஆண்டுக்குள் உருகும் ஆர்டிக் கடல்

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

லண்டன், நவ.- 12 - பூமியில் நிலவிவரும் பருவநிலை மாற்றத்தால் மூன்று ஆண்டுகளுக்குள் ஆர்டிக் கடல் முழுவதும் உருகி நீராக மாறிவிடும் என்று கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வரும் 2015 க்குள் ஆர்டிக் கடலில் உள்ள ஐஸ் கட்டிகள் முழுவதும் உருகி நீராகி விடும் என்று கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளதால் இங்கு வசிக்கும் துருவ கரடிகளும் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கடல் ஆராய்ச்சி நிபுணரான பீட்டர் வதம்ஸ் பூமியின் வடதுருவத்திலுள்ள ஆர்டிக் கடல் குறித்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார். அவரது ஆய்வில் ஆர்டிக் கடலில் உள்ள ஐஸ்கட்டிகள் முழுவதும் மிக வேகமாக உருவி வருவது தெரிவருகிறது. இதனையடுத்து ஐ.நா. கமிட்டி அறிவித்தது போல் ஐஸ்கட்டிகள் 2030 வரை இருக்காது என்றும் அவை நிச்சயம் 2015 க்குள் உருகிவிடும் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆர்டிக் கடலை ஒட்டியுள்ள வடக்கு ரஷ்யா, கனடா, கிரீன்லாந்து உள்ளிட்ட 4 மில்லியன் சதுர கிலோமீட்டரை சுற்றியுள்ள நாடுகள் பாதிப்பிற்குள்ளாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்டிக் கடலின் ஐஸ் மொத்தமும் உருகிவிடும் பட்சத்தில் துருவ கரடிகள் மொத்தமும் அழிந்து விடும் அபாயமும் உருவாகி உள்ளது என்றும் பீட்டர் வதம்ஸ் எச்சரித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago