முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - மே.இ.தீவு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று துவக்கம்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, நவ. 14 -  இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயா  ன 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் இன்று துவங் குகிறது. இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடருமா? 

கேப்டன் டேரன் சம்மி தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் போட்டி கடந்த வாரம் டெல்லியில் நடந்தது. 

டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி பெளலர்களின் அபார பந்து வீச்சால் 5 விக் கெட் வித்தியாசத்தில் மே.இ.தீவு அணியை வீழ்த்தியது. 

இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத் தாவில் உள்ள புகழ் பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று கா லை 9.30 மணிக்கு துவங்குகிறது.  இந்திய அணி இந்தத் தொடரில் தற்போது 1 - 0 என்ற கணக்கில் முன் னிலை பெற்று உள்ளதால் இந்திய வீரர்கள் தன்னம்பிக்கையுடனும், முழு உற்சாகத்துடனும் களம் இறங்குகின்றனர். இந்திய அணி இன்றைய  போட்டியில் வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றும். 

கடந்த வாரம் டெல்லியில் நடந்த முதல் போட்டியில் தமிழக சுழற் பந்து வீச்சாளரான அஸ்வின் 2 -வது இன்னிங்சில் 6 விக்கெட்டும், முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தி சா தனை படைத்தார். 

அதே போல ஓஜா 7 விக்கெட் கைப்பற்றினார். ஓஜா முதல் இன்னிங் சில், 6 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 1 விக்கெட்டும் எடுத்தார். தவிர, உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரும்கு நன்கு பந்து வீசினர். 

பேட்டிங்கில், சேவாக், டெண்டுல்கர், காம்பீர் மற்றும் டிராவிட் ஆகி யோர் நன்கு பேட்டிங் செய்து அணிக்கு தேவையான ரன்னை எடுத்த னர். யுவராஜ் சிங் அவர்களுக்கு பக்கபலமாக ஆடினார். 

மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் சந்தர்பால் நல்ல பார்மில் உள்ளா ர். அவர் முதல் இன்னிங்சில் சதமும், 2 - வது இன்னிங்சில் 47 ரன்னும் எடுத்தார். தவிர, சாமுவேல்ஸ், பிராட்வதே , எட்வர்ட்ஸ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பிஷூ, ரோச் போன்ற சிறந்த பெளலர்களு ம் அந்த அணியில் உள்ளனர். 

மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்த தால் இந்தப் போட்டியில் வெற்றி பெற கடும் சவாலை அளிக்கும் என் று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக அந்த அணி புதிய வியூகத்துடன் களம் இறங்குகிறது. 

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் இன்று துவங்க இருக்கும் டெஸ்ட் போட்டி நியோ கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago