முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றி அப்ரிடி மேட்ச் வின்னர் - கேப்டன் மிஸ்பா

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

துபாய், நவ. 14 -  இலங்கை அணிக்கு எதிராக துபாயில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி யில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவிய ஆல்ரவுண்டர் சாகித் அப்ரிடியை கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டினார். இது பற்றிய விபரம் வருமாறு -  பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டி இங்கு பகலிரவு ஆட்டமாக நடந்தது.  இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, பாகி ஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 131 ரன்னில் சுருண்டது. குறைந்த ஸ்கோரைக் கொண்ட இந்த ஆட்டத்தில் இலங்கை அணி தர ப்பில் ஒரு  வீரர் கூட அரை சதத்தை தாண்டவில்லை. சண்டிமால் அதி கபட்சமாக 28 ரன்னும், தரங்கா 25 ரன்னும், ஜெயவர்த்தனே 24 ரன்னு ம் எடுத்தனர்.  பாகிஸ்தான் அணி சார்பில் மூத்த வீரரான சாகித் அப்ரிடி 3 விக்கெட் வீழ்த்தினார். ஹபீஸ் மற்றும் சையது அஜ்மல் ஆகியோர் தலா 2 விக் கெட் எடுத்தனர். தவிர, சீமா மற்றும் ரசாக் ஆகியோர் தலா 1 விக்கெ ட் எடுத்தனர்.  பாகிஸ்தான் அணி 132 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை இலங்கை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 21.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்னை எடுத்தது. 

இதனால் பாகிஸ்தான் அணி இந்த முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக் கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

இலங்கை அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டனான மிஸ்பா உல் ஹக்கிடம் நிருபர்கள் கேட்ட போது, அவர் கூறியதாவது -  மூத்த வீரரான சாகித் அப்ரிடி சிறந்த ஆல்ரவுண்டர். எப்போதுமே மே ட்ச் வின்னர் தான். அதை இந்தப் போட்டியிலும் நிரூபித்து காட்டி இரு க்கிறார். அவருக்கு எனது பாராட்டுகள்.  அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுத் து விட்டார். அவரது பந்து வீச்சு இந்தப் போட்டியில் அபாரமாக இருந்தது. அதே போல மற்ற பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்ட னர். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்