முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ரோஜர் பெடரர் அரை இறுதிக்கு முன்னேற்றம்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், நவ. 14 -  பிரான்சில் நடைபெற்று வரும் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் வெற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

ஏ.டி.பி மற்றும் டபிள்யு. டி. ஏ. ஆகிய இரண்டு சங்கமு ம் இணைந்து பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியை நடத்தி வருகின்றன. இந் தப் போட்டி கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது.  இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீர ர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது.  இந்தப் போட்டியில் பங்கேற்று வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைக ள் தரம ான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் சுவிட்சர்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரரும், அர்ஜென்டினாவின் இளம் வீரரான ஜூவானும் மோதினர். இந்தப் போட்டியின் துவக்கம் முதல் பெடரர் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் அவர் 6 - 3, 7 - 5 என்ற நேர் செட் கணக்கில் ஜூவான் மொ  னாக்கோவை வென்று அரை இறுதிக்குள் நுழைந்தார்.  இந்த ஆட்டம் சுமார் 90 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றி பெடரருக்கு 800 - வது வெற்றியாகும். இந்த சீசனில் மட்டும் அவர் 57 வெற்றிகளைப் பெற்று உள்ளார். 800 ஆட்டங்களில் வெற்றி பெறும் 7 -வது வீரர் பெடரர் ஆவார்.  முன்னதாக நடந்த முதல் செட்டில் பெடரர் முழுவீச்சில் களம் இறங்கி னார். இறுதியில் 6 -3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பின்பு நடந்த 2 -வது செட்டில், ஜூவான் போராடினார். இறுதியில் பெடரர் 7 -5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.  இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் பொபண் ணா மற்றும் பாகிஸ்தானின் அய்சம் அல் ஹக் குரேஷி ஜோடியும், பிரான்ஸ் மற்றும் செர்பிய இணையும் மோதின.  இந்தப் போட்டி சுமார் 1 மணி மற்றும் 20 நிமிடத்தில் முடிவுக்கு வந்த து. 3 செட்டுகளைக் கொண்ட இந்தப் போட்டியின் இறுதியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஜோடி 3 - 6, 6 - 4 , 10 - 6 என்ற செட் கணக்கில், மைக்கேல் லோட்ரா மற்றும் மோன்ஜிக் இணையை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்