முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹர்பஜன்சிங் வலுவான வீரராக அணிக்கு திரும்புவார் - கபில்தேவ்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, நவ. 14 -  இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் வலுவான வீரராக அணிக்கு திரும்புவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்தார். இது பற் றிய விபரம் வருமாறு -  இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந் த மாதம் நடந்த டெஸ்ட் போட்டி யின் போது, ஹர்பஜன்சிங்கிற்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு, அவர் போட்டிகளில் ஆடவில்லை. 

இதைத் தொடர்ந்து மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா இடை யே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் முன்னணி வீரரான ஹர்ப ஜன் சிங் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முத ல் டெஸ்டுக்கு அவர் தேர்வு பெறவில்லை. இந்நிலையில், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடக்க இருக் கும் 2 -வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதிலும் ஹர்பஜன்சிங் இடம் பெறவி ல்லை. 

அறிமுக சுழற் பந்து வீரரான அஸ்வின் மற்றும் ஓஜா ஆகிய சுழற் பந்து வீரர்கள் கடந்த வாரம் டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் சிறப் பாக செயல்பட்டதால் ஹர்பஜன் சிங்கிற்கு இடம் கிடைக்காமல் போனது. 

இது குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது - மே.இ.தீவு அணிக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரில் அஸ்வின் மற் றும் ஓஜா ஆகிய இரண்டு சுழற் பந்து வீரர்களும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். 

எனவே ஹர்பஜன் சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் என் னைப் பொறுத்தவரையில், ஹர்பஜன் சிங்கிற்கு இது நல்லது என்று நினைக்கிறேன். இந்த ஓய்வை பயன்படுத்தி அவர் இன்னும் வலுவான வீரராக அணிக் கு திரும்பி வரவேண்டும். அதற்கு போதுமான நேரம் அவருக்கு கிடை த்துள்ளது. ஹர்பஜன் சிங் மிகச் சிறந்த சுழற் பந்து வீரர். யாரும் அதை மறுப்பதற்கில்லை. இவ் வாறு முன்னாள் ஆல்ரவுண்டரான அவர் கூறினார். 

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் நடந்த ஒரு நாள் போட்டி மற்றும் இந்தியாவில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஹர் பஜன்சிங் பந்து வீச்சு எடுபடவில்லை. எனவே அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்