முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா டெஸ்ட்: இந்தியா பொறுப்பான ஆட்டம்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா,நவ. 15 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நேற்று துவங்கிய 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்னைக் குவித்தது. முதல் நாள் ஆட்டத்தில் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். தவிர, காம்பீர் மற்றும் வி.வி. எஸ். லக்ஷ்மண் ஆகியோரும் அரை சதம் அடித்தனர். இதனால் இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. 

இந்திய அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் 38 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் அவரது 100 -வது சதவாய்ப்பு நழுவியது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. 

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே யான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈட ன் கார்டன் மைதானத்தில் நேற்று துவங்கியது. 

முன்னதாக இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில், சேவாக் மற்றும் காம்பீர் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

இந்திய அணி இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 87.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 346 ரன்னை எடுத்தது. இந்திய அணி சார்பில் ஒரு வீரர் சதமும், 2 வீரர்கள் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர்.  

சமீப காலமாக சிறப்பாக பேட்டிங் செய்து வரும் முன்னாள் கேப்டன் டிராவிட் இந்தப் போட்டியில் மீண்டும் தனது திறனை வெளிப்படுத்தி சதம் அடித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். 

டிராவிட் 207 பந்தை சந்தித்து 119 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்ட ரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர், பிராத்வெயிட் வீசிய பந்தில் கிளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். 

துவக்க வீரர் காம்பீர் 103 பந்தில் 65 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். வி.வி.எஸ். லக்ஷ்மண் 116 பந்தில் 73 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 5 பவுண்டரி அடக் கம். தவிர, சேவாக் 33 பந்தில் 38 ரன்னையும், டெண்டுல்கர் 71 பந்தில் 38 ரன்னையும் எடுத்தனர். இதில் 6 பவுண்டரி அடக்கம். 

மே.இ.தீவு அணியின் எந்த ஒரு பந்து வீச்சாளராலும் ஆதிக்கம் செலுத் த முடியவில்லை. எப். எட்வர்ட்ஸ் 45 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தவிர, ரோச், சம்மி, பிஷூ மற்றும் சி. எட்வர்ட்ஸ் ஆகி யோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்