முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவை பூகம்பம் தாக்கியது

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

ஜாகர்தா, நவ.15 - இந்தோனேசியா நாட்டில் நேற்று அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மலுக்கூ மாகாணத்தில் கடலுக்கு அடியில் பூகம்பம் தாக்கியது. பூகம்பத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக இருந்தது. இருப்பினும், இந்த பூகம்பத்தால் உயிரிழப்போ, உடமைகளுக்கு இழப்போ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. அதே போல் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்டில் ஏற்பட்ட பூகம்பம், அதனால் ஏற்பட்ட சுனாமி தமிழ்நாடு வரை தாக்கியது நினைவிருக்கலாம். அந்த சுனாமியால் பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் பலியானதும் நினைவிருக்கலாம். தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 10 ஆயிரம் பேர் வரை மாண்டு போனார்கள். இதில் நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக அப்போது பாதிக்கப்பட்டன. அந்த சுனாமியை இன்று நினைத்தாலும் கூட நெஞ்சு பதறும். அந்த சுனாமிக்கு சுழி போட்டது இந்தோனேசியாதான்.

அந்த நாட்டில்தான் நேற்று மலுக்கூ மாகாணத்தில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் நேற்று காலை 11.05 மணிக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 கி.மீ. ஆழத்திற்கு இந்த பூகம்பம் தாக்கியதாம். ஆனாலும் விளைவுகள் கடுமையாக ஏற்பட்டதாக தகவல் ஏதுமில்லை. அந்த வகையில் திருப்திதான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்