முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் விடுதலைபுலிகள் பயிற்சி முகாம்கள் இருக்கிறதாம்

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

கொழும்பு,மார்ச்.11 - தமிழகத்தில் விடுதலைபுலிகளுக்கு பயிற்சி முகாம்கள் இருக்கின்றன என்றும் அந்த முகாம்களில் விடுதலைப்புலிகள் ஆயுத பயிற்சி பெற்று வருகிறார்கள் என்றும் இலங்கை பிரதமர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். 

இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டையில் சிங்கள ராணுவமானது பாகிஸ்தான், சீனா உள்பட நாடுகளில் இருந்து ஆயுதம் வாங்கி விடுதலைபுலிகளை வெற்றிகொண்டது. அதுவும் சர்வதேச போர் விதிகளை மீறி விஷவாயு குண்டுகளை வீசி அப்பாவி தமிழர்களையும் சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. இதனால் சர்வதேச மனித உரிமை சட்டத்தின்படி இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக தமிழகத்தல் 3 ரகசிய போர் பயிற்சி ஸ்தலங்கள் இருப்பதாகவும் அவரைகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு விடுதலைப்புலிகள் ரகசியமாக  பயிற்சி பெற்று வருகிறார்கள் என்றும் இது குறித்து புலனாய்வுத்துறையினர் மூலம் தகவல் கிடைத்துள்ளது என்றும் இலங்கை பிரதமர் டி.எம்.ஜெயரத்னே தெரிவித்துள்ளார். தனி ஈழம் கோரி கடந்த 20 ஆண்டுகளாக போராடி வந்த புலிகள் 2009-ம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டார்கள். அதன் பிறகு மீண்டும் தாக்குதலை நடத்துவதற்காக விடுதலைபுலிகள்  தமிழ்நாட்டில் போர் பயிற்சி பெற்று வருகிறார்கள். புலிகளிடமிருந்து வரும் எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்க இலங்கை தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜெயரத்னே விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 

கடந்த 9-ம் தேதி பாராளுமன்றத்தில் பேசிய ஜெயரத்னே, விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் எந்தவித தாக்குதலும் இல்லை. ஆனால் விடுதலைபுலிகள் மீண்டும் தலைதூக்காமல் இருக்க சட்ட விதிமுறைகளை கடுமையாக அமுலாக்க வேண்டும் என்று கூறினார். இலங்கையில் எமர்ஜென்சியை ரத்து செய்ய வேண்டும் என்று சர்வதேச நாடுகளும் அமைப்புகள் கோரி வருகின்றன. ஆனால் இந்த கோரிக்கையை இலங்கை அரசு புறக்கணித்து வருகிறது. இலங்கையில் கடந்த 1972-ம் ஆண்டில் இருந்து 2009 வரை நடந்த சண்டையில் விடுதலைபுலிகள் உள்பட தமிழர்கள் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடு செய்துள்ளது. இலங்கையில் அரசியல் எதிரிகளை ஒழிக்க எமர்ஜென்சியை இலங்கை அரசு பயன்படுத்துகிறது என்று குற்றச்சாட்டு சர்வதேச அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்