முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா அதிபர் நாட்டை விட்டு ஓட்டமா?

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

திரிபோலி,மார்ச்.11 - லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக போராட்டம் வலுவடைந்து உள்ளது. அரசுக்கு எதிராக போராடி வரும் புரட்சி படையினர் அதிபர் கடாபிக்கு 72 மணி நேரம் கெடு விதித்து இருந்தனர். இந்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது. 

தலைநகர் திரிபோலியில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள சாலியா நகரம் புரட்சி படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கிருந்து திரிபோலி நகரை நோக்கி புரட்சி படையினர் முன்னேறி வருகின்றனர். அவர்களை தலைநகரை நோக்கி நெருங்க விடாமல் தடுக்க ராணுவ விமானம், ஹெலிகாப்டர் மூலம் சரமாரி குண்டு வீசப்பட்டு வருகிறது. ஆனால் அதையும் மீறி புரட்சி படை முன்னேறி வருகிறது. 

தற்போது புரட்சி படையிடம் விமான எதிர்ப்பு பீரங்கிகள், ராக்கெட் குண்டுகள் உள்ளன. அவற்றின் மூலம் அரசு படையினரை தாக்கி வருகின்றனர். இவை தவிர மற்ற பகுதிகளில் இருந்தும் தலைநகரை நோக்கி படைகள் நகர்ந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே கடாபி தப்பியோடி விட்டதாக தகவல்கள் பரவியுள்ளன. கடாபி வழக்கமாக பயன்படுத்தும் பால்கான் 900 என்ற விமானம் எகிப்தில் இருந்து புறப்பட்டு கிரீஸ் வழியாக சென்றது. இதை கிரீஸ் உறுதிப்படுத்தி உள்ளது. ஆனால் கடாபி எங்கு சென்றார்? என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்