முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கைக்கு ஹில்லாரி எதிர்ப்பு

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,மார்ச்.12 - உள்நாட்டு கலவரம் நடந்து வரும் லிபியா மீது அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹல்லாரி கிளிண்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

எகிப்து நாட்டை எடுத்து ஆப்பிரிக்க கண்டத்தின் வடபகுதி நாடான லிபியாவிலும் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டக்காரர்கள் நாட்டின் பெரும்பகுதியை பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. போராடும் மக்கள் மீது லிபியா அதிபர் கடாபி ராணுவத்தை ஏவி வருகிறார். இதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லிபியா அதிபர் கடாபி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் லிபியா மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது. இதற்கு இந்தியா ஆதரவு கொடுத்துள்ளது. ஈராக் நாட்டு மீது அமெரிக்க கூட்டுப்படை போர் தொடுத்தது மாதிரி, லிபியா மீதும் ராணுவ நடவடிக்கையை எடுக்க அதிபர் ஒபாமா விரும்புகிறார். இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். லிபியா மீது அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்தால் அது எதிர் விளைவை ஏற்படுத்தும் என்று அமெரிக்க பாராளுமன்றத்தில் கூறினார். ஈராக்கிலும் விமானம் பறக்க தடை விதித்தோம். ஆனால் சதாம் உசேன் ஆதரவாளர்கள் விமானம் மூலம் அப்பாவி மக்கள் மீது குண்டுவீசி தாக்கினர். மேலும் இந்த தடையால் சதாம் உசேனை பதவியில் இருந்து நீக்க முடியவில்லை. செர்பியா மீதும் இதர நாட்டு விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்கள் பறக்க தடை விதித்தோம். அதுவும் சரியாக பலன் தரவில்லை. லிபியா நாட்டு மக்களுடன் அமெரிக்கா இருக்கிறது. இது லிபியா மக்களுக்கு சக்திவாய்ந்த வெடிகுண்டு மற்றும் புல்லட் துப்பாக்கிகள் மாதிரியாகும். அதனால் அதிபர் பதவியில் இருந்து கடாபி விரைவில் விலகுவார் என்று ஹில்லாரி கிளிண்டன் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்