முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.பி. உலக டென்னிஸ் போட்டி சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

லண்டன், நவ. - 29  - இங்கிலாந்தில் நடைபெற்ற ஏ.டி.பி. உலக டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் இறுதிச் சுற் றில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தார். ஆடவருக்கான ஏ.டி.பி. சுற்றுப் பயணப் போட்டிகளின் கடைசி போ  ட்டி இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் கடந்த ஒரு வார காலமாக வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற டாப் - 9 வீரர்கள் பங்கேற்ற  னர். கடந்த ஒரு வார காலமாக நடைபெற்ற இந்தப் போட்டி நேற்று டன் முடிவுக்கு வந்தது.
கடைசி போட்டியான இதில் பங்கேற்ற முன்னணி வீரர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தி பட்டத்திற்காக போராடினர். அவர் களது திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.  ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற சுவிட்சர்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடர ரும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் வீரரான சோங்காவும் மோதி னர்.  3 செட் வரை நீடித்த இந்த ஆட்டத்தின் இறுதியில் உலக முன்னாள் நம் பர் - 1 வீரரான ரோஜர் பெடரர் சிறப்பாக ஆடி, 6 - 3, 6 - 7(8), 6 - 3 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் சோங்காவை தோற்கடித்து பட்டத்தை தனது வசமாக்கினார்.
சுவிஸ் வீரர் ரோஜர் பெடரருக்கு இது 6 -வது ஏ.டி.பி. சாம்பியன் பட்ட மாகும். ஏ.டி.பி. உலகப் போட்டியின் இறுதிச் சுற்றில் பட்டம் வென்ற பெடரருக்கு ரூ. 4 கோடி பரிசுத் தொகை கிடைத்தது.
முன்னதாக நடந்த முதல் செட்டில் இரு வீரர்களும் போட்டி போட்டு ஆடினர். இதனால் இருவரும் மாறி மாறி புள்ளிகள் பெற்றனர். ஆனா ல் இடையில் பிரான்ஸ் வீரர் சற்று தடுமாறியதால் பெடரர் முன்னேறி செட்டை வென்றார்.
முதல் செட்டை கோட்டை விட்டாதால் 2- வது செட்டில் பிரான்ஸ் வீரர் சுதாரித்து ஆடினார். இதனால் ஆட்டம் இறுதியில் டை பிரேக்கிற் கு சென்றது. இதில் சோங்கா போராடி 7 - 6 என்ற கணக்கில் செட்டை க் கைப்பற்றினார்.
பின்பு ஆட்டத்தைத் தீர்மானிக்கக் கூடிய 3 -வது செட்டில் பெடரர் துவ க்கம் முதலே நன்கு ஆடி புள்ளிகள் பெற்றார். பிரான்ஸ் வீரர் அடிக்கடி தவறுகள் செய்ததால் பின்தங்கினார். இறுதியில் பெடரர் 6 - 3 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்