முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுமுகங்கள் நடிக்கும் அவர்களும்-இவர்களும்

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.12 - இப்படத்தை கேப்டன் சி.காமராஜ் தயாரிக்கிறார். வீரபாண்டியன் இயக்குகிறார். ஸ்ரீகாந்தேவா இசையமைக்கிறார். அகர்செங்குட்டுவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், லான்சிமோகன் எடிட்டிங் செய்ய, கலை எஸ்.எஸ்.மூர்த்தி கவனிக்க பாடல்களை பழனிபாரதி, நா.முத்துகுமார், சினேகன், கபிலன், இளையகம்பன் ஆகியோர் எழுதியுள்ளனர். இணை இயக்கும் ஆர்.டி.ஜெயவேல், தயாரிப்பு மேற்பார்வை முத்.அம்.சிவக்குமார், தயாரிப்பு வடிவமைப்பு கோபா.புகழேந்தி செய்திருக்கின்றனர்.

இப்படத்தில் விமல் நடராஜன், அழகி சதீஷ் ஐஸ்வர்யா சுப்ரஜா, இயக்குநர் அகத்தியன், கேப்டன் சி.காமராஜ், சார்லி, மாணிக்க விநாயகம், சி.எம்.குமார், தஞ்சை சின்னபொண்ணு, ஜெயஸ்ரீ, லக்ஷா, சுந்தரி ஆகியோர் நடிக்கிறார்கள்.

லக்ஷிகா பிலிம்ஸ் தயாரிக்கும் புதியடம் அவர்களும்-இவர்களும்.

நிறைய புதியவர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களே கடந்த காலங்களில் வரலாறாக பதிவாகியுள்ளது. கடந்த சில வரலாறே நம்மை எதிர்காலத்திற்கு கொண்டு செல்கின்றன. அப்படிக் கிடைத்த துணிவும் நம்பிக்கையும் என்னை முற்றிலும் புதுமுகங்களை வைத்து அவர்களும்-இவர்களும் என்ற திரைப்பத்தை இயக்கும் தைரியத்தைக் கொடுத்தது.

நிறுவனம் புதியது நான் புதியவன் இக்கதையை தாங்கி நடித்திற்கும் கதாபாத்திரங்களும் புதியவர்கள் . புதிய படங்களுக்கு வியாபாரமும் திரையரங்குகள் கிடைப்பது கடுமையாக இருக்கும் இத்தருணத்தில் அவர்களும், இவர்களும் திரைப்படம் அனைத்து ஏரியாக்களும் விற்பணையாகியுள்ளது. காரணம் வலுவான கதை, திரைக்கதை சொல்லப்பட்ட விதம் புதியவர்களின் நடிப்பாற்றல், ஸ்ரீகாந்த்தேவாவின் பாடல்கள் பின்னணி இசை சேர்ப்பு இவைகளே இத்திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. படம் பார்த்தவர்கள் அனைவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்லப்படம் பார்த்ததாக சொல்லி ஆறத்தழுவியது மேலும் துணிவைக் கொடுக்கிறது.

படத்தின் பாடல்களை சோனி நிறுவனம் வாங்கியதும் படம் விற்பனையாகி திரையரங்கிற்கு வரப்போகும் எப்பொழுதும் நல்ல  திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு எங்களுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago