முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில் பலத்த பாதுகாப்பு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.2​  - டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனை 24 மணி நேரமும் முடுக்கி விடப்பட்டுள்ளது. முக்கிய இடங்கள், ரயில்வே நிலையங்கள், பஸ் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரம் வாகன சோதனை நடத்தப்படுகிறது. போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் முக்கிய இடங்கள், ஓட்டல்கள், பஸ் நிலையங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சென்னை நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகின்றன. நகரில் பல இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். துணை போலீஸ் கமிஷனர் சுதாகர் உத்தரவின் பேரில் nullலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அண்ணா நகர் துணை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் போலீசார் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் உடமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிடப்படுகிறது. இரவு​பகலாக இந்த சோதனை நடந்து வருகிறது. இதேபோல சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலும் பயணிகள் கடுமையான தோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்