முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சில்லரை வியாபாரிகள் வேலையை இழக்க நேரிடும்: அத்வானி

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

ஆமதாபாத்,டிச.4 - சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்தால் நாட்டில் காடிக்கணக்கான சில்லரை வியாபாரிகள் வேலையை இழக்க நேரிடும் என்று எல்.கே. அத்வானி எச்சரித்துள்ளார். நாட்டில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சினையால் பாராளுமன்ற கூட்டமே முடங்கிப்போய் இருக்கிறது. 

இந்தநிலையில் குஜராத் மாநில தலைநகர் ஆமதாபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் மாநில முதல்வர் நரேந்திர மோடி உள்பட கட்சி தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எல்.கே. அத்வானி பேசுகையில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு கடுமையாக தனது எதிர்ப்பை தெரிவித்தார். அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தால் நாட்டில் கோடிக்கணக்கான சில்லரை வியாபாரிகள் தங்களுடைய வேலையை இழக்க நேரிடும் என்றார். அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்திருந்தும் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு ஏன் முடிவு செய்தது என்பது தெரியவில்லை. அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டில் பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறையும் என்று மத்திய அரசு கூறுவது மத்திய அரசை முட்டாள்தனமாக்குவதாகும். அன்னிய நேரடி முதலீட்டில் மேற்கத்திய நாடுகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்றும் அத்வானி கடுமையாக எச்சரித்தார். மேற்கத்திய வியாபாரிகளும் முதலீட்டார்களும் மத்திய அரசுக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு அவர்கள் சேவை செய்ய மாட்டார்கள். நாட்டின் வளத்தைத்தான் சுரண்டி செல்வார்கள். மத்திய அரசு இந்த முடிவை ஏன் உடனடியாக எடுத்தது என்பது தெரியவில்லை. பிரதமர் மன்மோகன் சிங் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளதைபோல் செயல்படுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியில் கட்சி முடிவுப்படிதான் நிர்வாகம் இருக்க வேண்டும். ஆனால் இது ஜனநாயகத்தில் உகந்தது அல்ல என்றும் அத்வானி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்