முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் விவகாரங்களை திசை திருப்ப பார்க்கிறது மத்தியஅரசு-வெங்கையா நாயுடு

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச. - 5 - சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்திருப்பதன் மூலம் ஊழல் மற்றும் கறுப்பு பண விவகாரங்களை மக்களின் கவனத்தில் இருந்து மத்திய அரசு திசை திருப்ப பார்க்கிறது என்று பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில்,  சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல், தி.மு.க. ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்த பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்க்கின்றன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில முதல்வர்கள், எம்.பிக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வரும் திட்டம் அனைத்தும் மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் எல்லோரும் எதிர்க்கும் ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டிய உள்நோக்கம் என்ன? 2 ஜி ஊழல், கறுப்பு பண விவகாரம் ஆகியவற்றை திசை திருப்பவே சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு என்ற ஆயுதத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இப்போது நடைபெறும் ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசை கவிழ்க்கும் நோக்கமில்லை. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்கு மத்திய அரசும் உதவ வேண்டும் என்றார் வெங்கையா நாயுடு. இந்த சந்திப்பின் போது பா.ஜ.க. இல. கணேசன், மாநில துணை தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்