முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய நேரடி முதலீட்டால் 80 லட்சம் பேருக்கு வேலை கிடைக்குமாம்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,டிச.- 5 - சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டால் 80 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும் என்று நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பாரதிய ஜனதா மட்டுமல்லாது காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த பிரச்சினையால் கடந்த 10 நாட்களாக பாராளுமன்றம் முடங்கிப்போய் இருக்கிறது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தால் லட்சக்கணக்கானோர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் 80 லட்சம் பேருக்கு புதியதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று குலோபல் ஹண்ட் இயக்குனர் சுனில் கோயல் தெரிவித்துள்ளார். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டது. அன்னிய நேரடி முதலீட்டால் சில்லறை வர்த்தகம் ஊக்கம் பெறும். மக்களுக்கு ஒரு உயிர்காக்க்கும் மருந்தாகவும் இருக்கும் என்றும் கோயல் தெரிவித்துள்ளார். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு நாடு முழுவதும் சிரான முறையில் இருந்தால் சுமார் 60 லட்சம் முதல் 80 லட்சம் வரை வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் கோயல் மேலும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்